வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (13:23 IST)

மீண்டும் களத்தில் குதித்த சின்மயி: வைரமுத்து குறித்து அதிர்ச்சி டிவீட்

வைரமுத்து குறித்து சின்மயி போட்டுள்ள டிவீட் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். 
 
இந்நிலையில் மீண்டும் சின்மயி வைரமுத்துவை வம்பிழுக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில், எம்.ஜி.ஆர் சிவாஜி விருது வைரமுத்துவிற்கு கிடைத்துள்ளது. இதனை பி.ஆர்.ஓ ஸ்டார்வாட்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. நான் மதிக்கும் மிகப்பெரிய நிறுவனம், இந்த வருடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற பாடல்களுக்கெல்லாம் பரிசுகொடுக்காமல் வைரமுத்துவிற்கு இந்த விருதை வழங்கியது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.