வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 16 ஜனவரி 2019 (15:57 IST)

தமிழகத்தில் மதுவிலக்கு தேவை : கவிஞர் வைரமுத்து

இன்று திருவள்ளுவர் தினம் ஆகையால் அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல்வாதிகள் போன்றோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
வெற்றித் தமிழர் பேரவையின் தலைவரான கவிஞர் வைரமுத்து ஐயன் வள்ளுவன் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியாதாவது:
 
உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்தது கால் நூற்றாண்டு வரை சமூக நீதிக்காக போராடிய தலைவர்களுக்கு தோல்வியாகும்.10 % இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது.
  
மேலும்,தற்போது தமிழகம் மதுவினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மதுவிலக்கு அவசியம் தேவை.கிராமத்தில் முதியவர்களின் எண்ணிக்கை குறைவிற்கு மதுவே காரணம். அரசின் வருமானத்திற்காக 20 % மக்கள் மதுவில் தத்தளிக்க வேண்டுமா ..? இவ்வாறு தெரிவித்தார்.