மீடூ புகார்: தற்போதைய நிலை என்ன? சீறும் சின்மயி!!!

Last Updated: திங்கள், 28 ஜனவரி 2019 (21:17 IST)
மீடூ குறித்து புகார் அளித்தபோதும் இது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என சின்மயி கூறியுள்ளார்.


அண்மையில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். சின்மயி இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்த பிறகு பல சினிமா பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகளை வெளியே சொல்ல ஆரம்பித்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல பெண்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின் பேசிய சின்மயி, மீடூ குறித்து போலீஸில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எந்த நடவடிக்கையும் இன்னமும் எடுக்கப்பட்வில்லை. நாங்கள் நசுக்கப்படுகிறோம். வாய்ப்புகள் எனக்கு குறைய ஆரம்பித்துவிட்டது. டப்பிங் யூனியனிலிருந்து என்னை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன். அதில் வெற்றி பெறுவேன் என கூறினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :