1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 13 நவம்பர் 2019 (10:37 IST)

பொது இடத்தில் நடிகை ஸ்ரீ திவ்யாவை ப்ரொபோஸ் செய்த நபர் - வீடியோ!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்ககளை கொடுத்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் நீண்டுகொண்டே போகும். அதிலும் ஒரு சிலர், வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருவார்கள்.
அந்தவகையில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதையடுத்து கடந்த சில நாட்களாக ஜிம்மில் நேரத்தை செலவழித்து எப்படியாவது விட்ட இடத்தை பிடித்து விடவேண்டுமென முயற்சித்து வருகிறார். 
 
இந்நிலையில் ஸ்ரீ திவ்யா மேடை ஒன்றில் பேச முயற்சித்த போது அங்கிருந்த நபர் ஒருவர் "ஸ்ரீதிவ்யா ஐ லவ் யூ" என கத்தி சொல்ல என்ன செய்வதென்றே தெரியாமல் அந்த நிமிடம் பேசாமல் சிரித்துக்கொண்டே அமைதியாக இருந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ப்ரோமோஷன் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது டிக் டாக்கில் வைரலாகி வருகிறது.