செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2020 (16:07 IST)

கண்ணகி வந்து எரித்து சாம்பலாக்கட்டும் – சின்மயி கோபம்!

வைரமுத்து மீது மீ டு குற்றச்சாட்டு புகார் வைத்த பாடகி சின்மயி தனது முகநூல் பக்கத்தில் அது குறித்து மீண்டுமொரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

சின்மயியின் முகநூல் பதிவு:-

நான் file பண்ணுன sexual harassment case against Mr Vairamuthu - உங்களால நம்ப முடியலையா? பரவாயில்ல. எப்படி react பண்ணனும்னு புரியலையா, ஒரு accusation (13 actually) மட்டுமே வெச்சு ஒருத்தர குற்றவாளின்னு எப்படி சொல்வதுன்னு குழப்பமா இருக்கா? நியாயம் தான்.

பாலியல் குற்றங்களை முன்வைக்கும்போது எவனும் பாராட்டு விழா நடத்த போறது இல்ல. இந்த குற்றச்சட்ட முனைவெச்சதுனால நான் gain பண்ணது எதுவும் இல்ல. ஏனோ பாலியல் குற்றத்துல மட்டும் குற்றவாளிக்குதான் இந்த விஷயத்துல மட்டும் benefit of doubt. குற்றம் சாட்டுனவங்கள இழிவுபடுத்தும் சமுதாயம்.

கவிஞர் வைரமுத்து அவர்களின் சிபாரிசால் எனக்கு பாடல் வாய்ப்புகளோ வேலை வாய்ப்புகளோ வந்ததில்லை. இத்தனைக்கும் அவரோட position use பண்ணி எப்பப்பாத்தாலும் அவரோட சொந்த கவிதைகள், அல்லது புத்தக வெளியீட்டு விழாவுல பாட சம்பளம் குடுக்காம பாட வெச்சது தான் கண்ட பலன்.

2 வருடங்கள்ல எந்த ஒரு journalist-ஆவது ரங்கராஜ் பாண்டே என்ன தொகைச்ச்சு எடுத்து, அழவிட்டு அனுப்புன மாதிரி எவராச்சும் கவிஞரை கேள்வி கேட்டுரகங்களா? திரு பாண்டே அவர்களுக்கு பயங்கர பெருமை வேற என்ன அழவிட்டுடடேன்னு. இதுல என்ன interview பண்ணும்போது நான் பதில் சொல்லும்போது correct a போன்ல எதையோ பாத்துட்டே இருந்தாரு. நான் சொன்னதை கவனிக்ககூட இல்ல.

அப்ப அனுபவம் பத்தலை. அந்த மாதிரி behave பண்ணுனா அந்த interviewல இருக்ககுருடாதுன்னு தெரியல. சொல்லிகுடுக்க யாருமில்ல. பாண்டே அவர்களுக்கு அது ஒரு பெரிய்ய advantage. ஆனால் பாண்டே போன்ற journalists எப்படி பிஹேவ் பண்ணுவாங்கன்ற experience கடைச்சது. அந்த experience தேவையான்றது மற்றொரு கேள்வி. ஆனா இந்தக்கேள்விக்கான பதில் எங்கிட்ட இல்ல.

"தாயே உன் கண்ணுல இருக்கற உண்மையை இந்த தமிழகம் பார்க்கும் தாயே"ன்னாரு. இந்த மண்ணாங்கட்டி நாட்ல உண்மைன்னு தட்டுல பதிச்சு காட்டுனா கூட கண்ணமூட்டுகிட்டு போற மூட வர்க்கம்.

இத்தனை நாள்ல, இந்த பெரிய்ய முற்பொற்க்கு தமிழ்நாட்டுல ஒருத்தருக்கும், எந்த press meet-லயும் அவரை கேள்வி கேட்க வக்கில்லை. MeToo பத்தி கேள்விகள் வேண்டாம்னு அவர் சொல்வாராம், இவங்களும் சரிங்க எசமான்னு சொன்னபடி கேட்டுப்பாங்களாம். ஆனா நான் என்ன பேசுனாலும் பாடுனாலும், "கேஸ் என்ன ஆச்சு?"ன்னு என்ன மட்டும் கேட்டு உயிரை எடுக்க வேண்டியது. Airport வாசல்ல வந்து நிக்க வேண்டியது.

அனால் அதுவும் சகிச்சுக்கிட்டேன். பொறுத்துகிட்டேன்
BUT
"அவரோட படுத்துட்டு இப்போ பேசுறே",
"நீ பொய் சொல்ற",

"நீ பாஜக கைக்கூலி ஜாதி வெறிபிடிச்ச்சு பொய் சொல்ற" ன்னு நாக்கூசாம சொல்லுற அத்தனை நபர்களுக்கும், உண்மை தெரிந்தும் கவிஞருக்கு துணைபோகும் அத்துனைபேருக்கும் நான் விரும்புவது, வேண்டுவது ஒன்றே - என் அனுபவங்கள், மற்றும் முன்வந்து சொன்ன 12 பெண்களின் அனுபவங்கள் மொத்தமும் உங்களுக்கு சேரட்டும் என்று வேண்டுகிறேன். இத்தனை நாள் உங்களுக்கு புரிதல் வந்துருக்கும். awareness create பண்ணிகிட்டே இருந்தா ஒரு நாள் மாற்றம் வரும்னு நினைக்கிறது ஒரு பக்கம்.
ஆனால் எருது நோவு காக்கைக்கு அறியாது. காய்ச்சலும் நோயும் தனக்கு வந்தாதான் தெரியும் னு சொல்லிருக்காங்க.

அனுபவிங்க. அனுபவிச்ச தான் புரியும். (நீங்க செருப்பை எடுத்து அடிக்கக்கூயூடியவரா இருந்தா, உங்களுக்கு நானே வீரர்/வீராங்கனை விருது தர்றேன். ஆனா எல்லோராலையும் இந்த சூழல்ல ஒரே மாதிரி behave / react பண்ண முடியாது. இது புரியலைன்னா புரிஞ்சுக்கோங்க.)

(எங்கள் அனுபவங்கள் என்றால் - பாலியல் துன்புறுத்தல் அனுபவிக்கணும்னு சொல்லல. என்னதான் எனக்கு கோவம் இருந்தாலும், அது மட்டும் யாரும் அனுபவிக்ககூடாது. நான் சொல்றது நீங்களும் ஒரு பெரிய்ய அரசியல்வாதி கிட்ட மாட்டி, கஷ்டப்பட்டு, அவதிபட்டு, நியாயம் கடைக்காம நீங்க உண்மையை சொன்னாலும் "பொய் சொல்ற"ன்னு சொல்லும் இதே சமுதாயத்தை நீங்களும் அனுபவிக்கணும்னு வேண்டுகிறேன். பாலியல் துன்புறுத்தல்களை பற்றி வெளிவந்து சொல்லும் எந்த ஆன் பெண், மாற்றுப்பாலின மக்களுக்கு மனதுநோகும்படி torture பண்ற அத்துனைபேரையும் ஒரு கண்ணகி வந்து எரிச்சு சாம்பலாகட்டும் )