1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (18:44 IST)

இப்படியெல்லாமா நிகழ்ச்சி ஒளிபரப்புவது? தனியார் டிவிக்கு கண்டனம் தெரிவித்த சின்மயி

தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சினிமா செய்திகள் ஒளிபரப்பிய போது த்ரிஷா, நிவேதா பெத்துராஜ் ஆகிய நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துக்களை தொகுப்பாளினி கூறினார். இதற்கு அனைத்து நடிகர் நடிகைகள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததல், அந்த தொலைக்காட்சி அந்த நிகழ்ச்சியில் உள்ள பகுதியை நீக்கி விட்டது 
 
இந்த நிலையில் இதுகுறித்து பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். ஒரு மீம்ஸ் கிரியேட்டர் எழுதுவது போன்ற மிகவும் மலிவான வசனங்கள் வார்த்தைகள் அந்த செய்தியில் இருந்ததாகவும், இது நகைச்சுவை சம்பந்தமான விஷயமில்லை என்றும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதனை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் அந்த தொலைக்காட்சிக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள சின்மயி, அந்த தொலைக்காட்சி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சின்மயியின் இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது