"பிக் பாஸ் 3" சீசன் துவங்கும் தேதி வெளியானது!

Last Updated: செவ்வாய், 21 மே 2019 (11:35 IST)
பிக்பாஸ் 3 சீசன் துவங்கும் தேதி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. 

 
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்னும் சில நாட்களில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அந்தவகையில் இதற்கு முன்னதாக இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் ரமேஷ் திலக், சுதா சந்திரன், லைலா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அதை மூவருமே மறுத்தனர். அதேவேளையில் நடிகை சாந்தினி தமிழரசன் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்திருந்தார்.
 
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக  வெளியிட்டது.மேலும் அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன் ஸ்டைலாக தோன்றினார். நேற்று இந்நிகழ்ச்சியில் ஓகே ஓகே பட புகழ் ஜாங்கிரி மதுமிதா உறுதி செய்யப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்ய தகவல் என்னவென்றால் நிகழ்ச்சி துவங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் ஜூன் 23 ஆம் தேதி துவங்க இருக்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :