லியோவில் த்ரிஷாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்தது இந்த பிரபலம்தானா?
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.
படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் இன்னும் படத்தின் ரிலீஸுக்கு 9 நாட்களே உள்ள நிலையில் படம் பற்றி பல தகவல்கள் சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரிஷா நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரங்களுக்கு எப்போதுமே அவர் டப்பிங் பேசுவதில்லை. இந்நிலையில் இப்போது லியோ படத்தில் திரிஷாவுக்கு பாடகி சின்மயிதான் டப்பிங் பேசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் விண்ணைத்தாண்டி வருவாயா, என்றென்றும் புன்னகை மற்றும் 96 ஆகிய படங்களில் திரிஷாவுக்கு சின்மயி டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.