1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2018 (20:42 IST)

பின்னணிப் பாடகி சின்மயி கணவருக்கு ஜோடியாக நடிக்கும் சமந்தா

பின்னணிப் பாடகி சின்மயி கணவரின் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் சமந்தா.
பிரபல பின்னணிப் பாடகி சின்மயி. இவருடைய கணவர் ராகுல் ரவீந்திரன், ‘மாஸ்கோவின் காவிரி’ உள்பட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர். ஏகப்பட்ட தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சமந்தாவின் பாய் பிரண்டாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
 
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான கன்னடப் படம் ‘யு டர்ன்’. பவன் குமார் இயக்கிய இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. பவன் குமாரே இரண்டு மொழிகளிலும் இயக்குகிறார். 
 
பெண்ணை மையப்படுத்திய இந்தக் கதையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் பத்திரிகையாளராக நடித்திருந்தார். அவர் வேடத்தில் சமந்தா நடிக்கிறார். தமிழ் - தெலுங்கு இரண்டிலும் சமந்தா தான் ஹீரோயின். இந்தப் படத்தில் தான் சமந்தாவின் பாய் பிரண்டாக நடிக்கிறார் ராகுல் ரவீந்திரன்.