புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2018 (19:59 IST)

இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது: பொங்கி எழுந்த பிரியா வாரியர்

தன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் நடிகை பிரியா வாரியர். 
 
அண்மையில் வெளியான 'ஒரு அடார் காதல்' மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் உள்ள பிரியா வாரியர். தனது முக பாவனை மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார். குறிப்பாக தமிழக இளைஞர்களின் மனதில் குடியேறினார்.
 
பிரியா வாரியர் பாடிய பாடல் இஸ்லாமியர்களின் மனங்களை புண்படுத்துவதாக கூறி ஹைதராபாத் மற்றும் மகாராஷ்டிராவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான வழக்காகும், எனவே இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு பிரியா வாரியர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.