1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2017 (18:33 IST)

இயக்குநராகும் சின்மயி கணவர்

பிரபல பின்னணிப் பாடகியான சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன், இயக்குநராக அறிமுகமாகிறார்.


 

 
தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்துள்ள ராகுல் ரவீந்திரன், பெயரிடப்படாத தெலுங்குப் படமொன்றை இயக்க உள்ளார். நாகர்ஜுனாவின் உறவினரான சுஷந்த், ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறார் ராகுல்.
 
உதவி இயக்குநராக வேண்டும் என்றுதான் நான் சென்னைக்கே வந்தேன். ஆனால், காலம் என்னை நடிகனாக்கி விட்டது. பணம் நிறைய கிடைக்கும் என்பதுடன், ஃபிலிம் மேக்கிங் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்பதால் நானும் நடிக்கத் தொடங்கினேன். இப்போது என் கனவை நிறைவேற்றுவதற்கான காலம் வந்துவிட்டது என்கிறார் ராகுல் ரவீந்திரன்.