வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (18:40 IST)

''ChillaChilla '' பாடல் ஷூட்டிங் ஆரம்பம் ..அஜித் புகைப்படம் வைரல்

Thunivu
‘’துணிவு’’ படத்தில் இடம்பெற்றுள்ள #ChillaChilla  பாடல் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது.

இதில்,  நடிகை மஞ்சுவாரியர்,  நடிகர் அஜித்குமார், உள்ளிட்ட நடிகர்கள் தங்களின் டப்பிங் பணிகளை முடித்துள்ளனர்.

சமீபத்தில், துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடல் ஆசிரியர் வைசாக் எழுதியுள்ள ‘’சில்லா சில்லா’’ என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.

இப்பாடலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், #ChillaChilla  என்ற பாடலின் ஷூட்டிங் இன்று தொடங்கி புதன் கிழமை வரை நடக்கவுள்ளதாகவும், இதற்கு கல்யான் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று அஜித்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj