1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (22:04 IST)

தமிழக முதல்வருக்கு சேரன் விடுத்த வேண்டுகோள்: பரிசீலிப்பாரா முதல்வர்?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தனது டுவிட்டர் பக்கம் மூலம் வேண்டுகோள் ஒன்றை இயக்குனர் சேரன் விடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
 
எழுத்தாளர்களை கெளரவிப்பது பாராட்டுக்குரியது.. அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கான, சமூகத்திற்கான சீர்திருத்த படங்களை உருவாக்கும் இயக்குனர்கள் திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு இந்த பதிவை இடுகிறேன்
 
விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்கள் வியாபாரச்சந்தையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள். படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. வியாபாரம் சாராததுதான் மக்களுக்கான கலை.. அதை கவனத்தில் கொண்டு இதை பாருங்கள்..
 
மாநில விருது, தேசிய விருது பெற்ற இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் வாழ்வியல் பிரச்னைகளில் இருக்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத்துறையின் முன்னோடிகளையும் கெளரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்
 
இயக்குனர் சேரனின் இந்த வேண்டுகோளை முதல்வர் பரிசீலிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்