1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (15:04 IST)

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு… எஸ்பிபி பிறந்த நாளில் கமல் டுவிட்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு… எஸ்பிபி பிறந்த நாளில் கமல் டுவிட்
பிரபல பின்னணி பாடகர் மறைந்த எஸ்பிபி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை எடுத்து சமூக வலைதளங்களில் அவரது நினைவுகளைப் போற்றிப் புகழ்ந்து பலர் பதிவு செய்து வருகின்றனர்
 
குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் எஸ்பிபி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் சற்றுமுன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்பிபிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துவிட்டு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் எஸ்பிபி உடன் அவர் பாடல் பாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டுவிட்டில் கமல் கூறியிருப்பதாவது:
 
அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’