திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (11:53 IST)

இன்று வெளியாக இருந்த ஆண்ட்ரியா படத்திற்கு தடை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

நடிகை ஆண்ட்ரியா நடித்த ’கா’ என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ஆண்ட்ரியா நடித்த ’கா’ என்ற திரைப்படத்தை நாஞ்சில் இயக்கி இருந்த நிலையில் இந்த படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என எய்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ’கா’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தார்.

’கா’ படத்தை தயாரிப்பதற்காக தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் என்பவர் தன்னிடம் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும் இந்த கடனை இழப்பீடு தொகையுடன் சேர்த்து 90 நாட்களில் திருப்பி தந்து விடுவதாக கூறிய நிலையில் இன்னும் அவர் திருப்பி தரவில்லை என்றும் எனவே படத்தின் ரிலீசை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ’கா’ படத்தை வெளியிட இடைக்கால  தடை விதித்தார். மேலும் இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தயாரிப்பாளருக்கு நீதிபதி உத்தரவிட்டு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்தார்.

Edited by Mahendran