1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (10:27 IST)

சூதுகவ்வும் 2… விஜய் சேதுபதியின் குருநாதர் சத்யராஜ்- பரபரப்பாக உருவாகும் ப்ரிக்வல்!

சூதுகவ்வும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள சூதுகவ்வும் 2 திரைப்படத்தில் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களின் வெற்றியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்த விஜய் சேதுபதியை ஹீரோவாக மாற்றியப் படம் சூதுகவ்வும். தமிழில் பிளாக் காமடி வகைப் படங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இன்றுவரை திகழ்ந்து வருகிறது அந்தப் படம்.

இந்நிலையில் இப்போது சூதுகவ்வும் தயாரிப்பாளர் சிவி குமார் அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை யங் மங் சங் படத்தின் இயக்குனர் அர்ஜுன் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் சூதுகவ்வும் படத்தின் பின் பகுதியாக இலலாமல் முன் பகுதியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. சூதுகவ்வும் திரைப்படத்தில் தாஸ் ஏற்று நடித்திருந்த தாஸ் கதாபாத்திரத்தின் குருநாதர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்லும் கதைக்களமாம்.