மாஸ்டரால் காசி தியேட்டருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்!
மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று காலை 4 மணிக்காட்சியோடு ரிலீஸாகியுள்ளாது. கொரோனா ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படையெடுத்துள்ளனர்.
பொங்கல் தினத்தில் வெளியாவதால் கொண்டாட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது முதல் காட்சியை பார்க்க பெண்கள், ஆண்கள் என விடியற்காலை முதல் தியேட்டர் வாசிகளில் ரசிகர்கள் காத்திருந்து படத்தை பார்த்து செல்கின்றனர்.
இந்நிலையில் தற்ப்போது மாஸ்டர் படம் பார்க்க அதிக அளவில் கூடிய ரசிகர்களால் கொரொனா விதிமுறை மீறி செயல்பட்ட சென்னை காசி திரையங்கிற்கு ரூ.5000 அபராதம் விதித்ததுள்ளது சென்னை மாநகராட்சி.