1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (14:56 IST)

சென்னை ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!

சென்னை ஆல்பர்ட் தியேட்டருக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!
சென்னையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றான ஆல்பர்ட் தியேட்டரை திடீரென மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
2021-22ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது
 
இன்று சொத்து வரியை செலுத்த தவறியவர்களுக்கு வட்டி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 50 ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து வரி மற்றும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட கேளிக்கை வரியை ஆல்பர்ட் திரையரங்கம் நிர்வாகம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
 
இதனையடுத்து சொத்துவரி மற்றும் கேளிக்கை வரி செலுத்தாத காரணத்தினால் ஆல்பர்ட் தியேட்டருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்