புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (16:39 IST)

சேரன் நடிக்கும் புதிய படத்தின் வித்தியாசமான டைட்டில்!

சேரன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு தமிழ்க்குடிமகன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சேரன் மாயக்கண்ணாடி படத்தின் தோல்விக்குப் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் இன்றி உள்ளார். இதையடுத்து அவர் நடிப்பில் கவனம் செலுத்தவே சில படங்களில் நடித்து வந்தார். அதிலும் இப்போது ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிட்டுள்ளது. அதைப் போக்கும் விதமாக ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார்.

இதையடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு தமிழ்க் குடிமகன் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இசக்கி கார்வண்ணன் என்பவர் இயக்குகிறார்.