புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (19:53 IST)

சேரன் நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் மற்றும் இயக்குநர் சேரன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தமிழ்க்குடிமகன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று சென்னையில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த படத்தின் முதல் காட்சியும் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சேரன், தீபிகா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்தை இசக்கி என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சேரன் நடித்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு என்று தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது