1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (17:14 IST)

சபரிமலை குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜகா வாங்கிய முதல்வர்

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டதை கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். நேற்று கோவிலுக்குள் செல்ல முற்பட்ட இரண்டு பெண்களை திருப்பி அனுப்பினர். 
 
மேலும், உண்மையான பெண் பக்தர்கல் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், செய்தியாளர்கள், பெண்ணியவாதிகள் ஆகியோருக்கு அனுமதி இல்லை என கேரள அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. 
 
இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், திருவாங்கூர் தேவ்சம் போர்டு எப்போதும் தங்களது பாரம்பரியத்தை விட்டு கொடுக்காது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்தார். 
 
அதோடு, தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மத்திய அரசு சார்ப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. 
 
இந்நிலையில், சபரிமலை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்ட போது, சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.