திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (08:49 IST)

பழிவாங்கக் கிளம்பும் வேட்டையன் ஆவி… இதுதான் சந்திரமுகி கதையா?

சந்திரமுகி 2 படத்தின் கதைப் பற்றி இணையத்தில் ஒரு செய்தி உலாவி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் சிவாஜி பிலிம்ஸ் வசம் உள்ள நிலையில் அதை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். மிகப் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ளது இந்த திரைப்படம்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கதைப் பற்றி இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதன் படி ‘கொலை செய்யப்பட்ட சந்திரமுகியின் ஆவி வந்து வேட்டையனை பழிவாங்கிய திருப்தியில் சென்றுள்ள நிலையில் முதல்பாகம் முடிவுற்றது. ஆனால் இப்போது வேட்டையன் சந்திரமுகியைப் பழிவாங்க மீண்டும் வருவது போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம்’ என சொல்லப்படுகிறது.