1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (11:13 IST)

’ஹிந்தி தெரியாது போடா’: களத்தில் குதித்த இன்னொரு தமிழ் நடிகை!

ஹிந்தி தெரியாது போடா’: களத்தில் குதித்த இன்னொரு தமிழ் நடிகை!
கடந்த சில நாட்களாக ஹிந்தி தெரியாது போடா’ மற்றும் ‘ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் கொண்ட டீசர்ட் அணிந்து திரையுலக பிரமுகர்கள் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பது தெரிந்ததே 
 
குறிப்பாக யுவன்சங்கர்ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, அவரது மனைவி கிகி, ஷிரிஷ் உள்பட பலர் ஹிந்திக்கு எதிரான வாசகங்கள் கொண்ட டீசர்ட்டை அணிந்தனர் என்பதும் இந்த பட்டியலில் இயக்குனர் வெற்றிமாறனும் தனது சமூக வலைத்தளத்தில் இதேபோன்ற டீசர்ட் அணிந்து தனது மகனுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் தமிழ் திரைப்பட கதாநாயகிகளில் ஒருவரான சாந்தினி தமிழரசன் ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்களை கொண்ட டீசர்ட் அணிந்து தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் ’வணக்கம் மக்களே’ என்றும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது