திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (16:27 IST)

இந்தி தெரியாது போடா என்றால் படிக்காமல் போங்கள்…. கடுப்பான ஹெச் ராஜா!

இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆவதை அடுத்து பாஜக செயலாளர் ஹெச் ராஜா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இந்த ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரண்ட் ஆனதால் இப்போது இந்த டிஷர்ட்க்கான ஆர்டர்கள் குவிந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று சிவகங்கையில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹெச் ராஜாவிடம் இது பற்றி கேட்ட பொழுது ‘இந்தி தெரியாது போடா என்றால் படிக்காமல் போங்கள். தேசிய கல்விக் கொள்கையில் எல்லா மொழிகளும் இருப்பதனால், அது பன்முகத் தன்மை கொண்டதாக உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.