முன்னணி நடிகையின் படத்திற்கு சென்சார் சான்றிதழ் மறுப்பு !! ரசிகர்கள் அதிர்ச்சி
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் நேரு பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழத்தில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றி ஆய்வு செய்வதற்காகக் செல்லும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண், தனது ஆராய்ச்சியில் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை மையமாக்கொண்டு, சித்தார்த் சிவா இயக்கத்தில் இருவாகியுள்ள படம் வர்தமானம்.
இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளவர் பார்வதி.இந்நிலையில் இப்படத்திற்கு கேரள மாநில மத்திய கேரள மண்டலப்பிரிவு சென்சார் சான்றிதழை மறுத்துள்ளது.
மேலும் இப்படத்தின் கையக்கருத்தாக நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரின் ஒற்றுமையைக் குறிக்கும் விதத்தில் இப்படம் உள்ளது என தெரிகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு கேரள மாநில மத்திய மேரள மண்டலப்பிரிவு சென்சார் சான்றிதழை மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.