1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 மே 2022 (11:35 IST)

கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன்: வேஷ்டி-சட்டையில் கலக்கல்!

cannes l murugan
கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன்: வேஷ்டி-சட்டையில் கலக்கல்!
தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் மத்திய அமைச்சர் எல் முருகன் பங்கேற்றுள்ளார் 
 
மத்திய அமைச்சர்கள் எல் முருகன் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்று கலந்துகொண்டார் 
 
அவர் சிவப்பு கம்பள வரவேற்பில் வேஷ்டி சட்டை காஸ்ட்யூமில் சென்றது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ள நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், எல் முருகன் அவர்களை வரவேற்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது