ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By vinoth
Last Modified: புதன், 3 ஜூலை 2024 (09:56 IST)

அந்நியன் ரீமேக் பணிகளைக் கைவிட்டு விட்டாரா ஷங்கர்?... அவரே அளித்த பதில்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரே ரன்வீர் சிங்கை வைத்து இயக்குகிறார். இந்நிலையில் தமிழ் அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன்னுடைய அனுமதி இல்லாமல் ரீமேக் செய்ய கூடாது என ஷங்கருக்கு அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்நியன் படத்தின் கதை உரிமை தன்னிடம்தான் உள்ளது என்றும் அதை தன் அனுமதி இல்லாமல் படமாக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

ஆனாலும் இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. ஆனால் இப்போது அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இந்தியன் 2 பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவரிடம் அந்நியன் எப்போது வரும் என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ‘இப்போதைக்கு அந்நியன் படம் கைவிடப்பட்டுள்ளது. இந்த படத்தை விட நான் பெரிய படத்தை இயக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் விரும்பினர். இந்தியன்  மற்றும் கேம்சேஞ்சர் படங்களை முடித்த பின்னர் அதை என்ன செய்யலாம் என முடிவெடுப்போம்” எனக் கூறியுள்ளார்.