1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (08:24 IST)

'மெர்சல்' ரிலீசுக்கு மீண்டும் சிக்கல்? பழிவாங்கும் பீட்டா?

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம்  வரும் புதன் அன்று வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டு கடந்த வாரம் 'யூஏ' சான்றிதழ் பெற்றது. 



 
 
இருப்பினும் இந்த படத்தில் விலங்குகள் காட்சிகள் இருப்பதால் விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற்று சென்சார் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் விலங்குகள் வாரியம் இன்னும் தடையில்லா சான்றிதழ் தராததால், இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் தயாரிப்பாளர் கைக்கு இன்னும் கிடைக்கவில்லை
 
இந்த நிலையில் பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக முடிந்து இந்த படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று தயாரிப்பாளர் ஹேமாருக்மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.