ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (23:10 IST)

கமல்ஹாசன் வெறுக்கும் பதவியை மோடியிடம் வேண்டி பெற்ற கவுதமி

கமல்ஹாசன் அடிக்கடி கூறும் ஒரு விஷயம் என்னவெனில் சினிமாவுக்கு சென்சார் போர்டு ஒன்றே இருக்கக்கூடாது என்பது. மேலும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் சான்றிதழ் பெற பணம் தன்னிடம் இதுவரை கேட்டதில்லை என்றும் கேட்டாலும் கொடுக்க மாட்டேன் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.



 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் வெறுக்கும் பதவியான சென்சார் போர்டு உறுப்பினர் பதவி தற்போது அவருடைய முன்னாள் துணைவி கவுதமிக்கு கிடைத்துள்ளது. ஆம், சென்சார் போர்டின் புதிய உறுப்பினர் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. அதில் முதல் பெயராக கவுதமியின் பெயர் உள்ளது. இந்த பட்டியலில் நடிகை வித்யாபாலனின் பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில மாதங்களாகவே பாஜகவிடம் நெருங்கி சென்ற கவுதமி தனக்கு ஏதாவது கொடுக்க பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அந்த செய்தி தற்போது உண்மையாகியுள்ளதாகவே கருதப்படுகிறது.