1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2017 (10:59 IST)

பாகுபலி 2 முக்கிய காட்சிகளை கட் செய்த சென்சார் போர்டு?

பாகுபலி 2ம் பாகம் 6000 தியேட்டர்களில் தற்போது வெளியாக உள்ளது. பாகுபலி 2 படத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்சார் முடிவடைந்து யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. பாகுபலியை கட்டப்பா கொன்றது ஏன்? என்ற கேள்விக்கு விடைதான் இரண்டாம் பாகத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

 

இப்படம் சென்சாருக்கு அனுப்பியபோது படம் சுமார் 36 மணி நேரத்திற்கும் மேல் இருந்ததாகவும், சென்சார் தரப்பில் சில காட்சிகளை நீக்கச் சொன்னதாகவும், சில காட்சிகள் நீக்கப்பட்ட பிரகு தற்போது படம் சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் மட்டும்தான் வரும் எனவும் கூறப்பட்டது.
 
படத்தில் சில முக்கிய காட்சிகளை சென்சார் போர்டு நீக்க கூறியபோது, அதனை நாங்கள் புரியவைத்து மீண்டும்  இணைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தின் வசூலை 700 கோடி ரூபாயைக் கடந்து 1000 கோடி ரூபாய் வசூலைப் எட்டுமா என திரையுலகினர் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.