செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (15:27 IST)

ஒன் பை டு படத்துக்கு சான்றிதழ் அளிக்க சென்ஸார் மறுப்பு!

இயக்குனர் விஜய் ஸ்ரீ என்பவர் அளித்த புகாரை அடுத்து இப்போது ஒன் பை டு படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் சாருஹாசன் நடிப்பில் உருவான தாதா 87 படத்தை இயக்குனர் விஜய் ஸ்ரீ என்பவர் தயாரித்து இயக்கி இருந்தார்.  விஜய்யோடு கலைச்செல்வன் என்பவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இணையத்தில் கவனம் பெற்றது. அதற்கு முக்கியக் காரணம் சாருஹாசன் 87 வயது தாதாவாக நடித்திருந்ததுதான். இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் காப்பி அடித்து தெலுங்கு ஒன் பை டு என்ற பெயரில் எடுத்துள்ளதாக இயக்குனர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் அந்த படத்துக்கு இப்போது சென்ஸார் அதிகாரிகள் சென்ஸார் தர மறுத்துள்ளனர். கலைச்செல்வனோடு இணைந்து ஒன் பை டு திரைப்படம் உருவாக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் இறந்து போய்விட்டதால் இப்போது விஷயம் பூதாகாரமாகியுள்ளது.