1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (17:36 IST)

வேலைக்காரன்: சென்சார் போர்ட் சொன்னது என்ன??

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் வேலைக்காரன். மேலும் முக்கிய வேடத்தில் ஃபகத் ஃபாஸில், சினேகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 
 
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 4 ஏஎம் ஸ்டூடியோஸ் படத்தை தயாரிக்கிறது. இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
சமீபத்தில் சென்சார் சென்ற படம், எதிர்ப்பார்த்தது போல் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தை பார்த்த சென்ஸார் அதிகாரிகள் படக்குழுவினர்களை மிகவும் பாராட்டியதாக தெரிய வந்துள்ளது.
 
மேலும் இந்த படத்தில் மிகவும் வலுவாக சமூக கருத்து  அடங்கியுள்ளதால், சென்சார்ர் பாராட்டியதாக கூறப்படுகின்றது. இப்படம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தாண்டி நடுநிலை ஆடியன்ஸுகளுக்கும் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.