திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (20:05 IST)

தன்னை விட 19 வயது குறைந்தவரை மணக்கும் பிரபல நடிகை !

முன்னாள் உலக அழகியும் இந்நாள் முன்னணி நடிகையுமான நடிகை சுஷ்மிதா சென், தன்னை விட 19 வயது இளையவரை திருமணம் செய்யவுள்ளார்.
பிரபல நடிகை மற்றும்  முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென், இந்தி தெலுங்கு, தமிழ் எனப் பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றார்.
 
நடிப்பு மட்டும் இல்லாமல் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு இரண்டு பெண்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் விளம்பர மாடல் ரோமன் ஷாலை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகிறது. தற்போது சுஷ்மிதா சென்னுக்கு 43 வயதாகிறது. அதேசமயம் ரோமனுக்கு 24 வயதாகியது. இவருக்கும் இடையே 19 வயது வித்தியாசம் உள்ளதாகத் தெரிகிறது. 
 
இதற்கு முன்னர் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.