வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (17:39 IST)

எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பான ஒரு அப்டேட்…வலிமை படம் குறித்து பிரபல நடிகர் டுவீட்

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ஹெச். விநோத் இயக்கி வரும் படம் வலிமை, போனி கபூர் இப்படத்தையும் தயாரிக்கிறார். நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு மூவரும் இணைந்துள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அஜித் ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சியாக இப்படத்தில் நடித்து வரும் கார்த்திகேயே தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் கூறி மெய்சிலிர்க்க ச் செய்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், எனது பிறந்த நாளின்போது உங்களின் அன்பை தெரிவித்த தல ரசிகர்களுக்கு நன்றி. நான் கடுமையாக உழைத்து வருகிறேன். கொஞ்சம் பொறுமையாக இருங்க நீங்க எதிர்ப்பார்த்தை விட   சிறப்பான ஒரு அப்டேட் வரும் என தெரிவித்துள்ளார்.
இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.