1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (13:46 IST)

பிகினில யாரது? எங்க ப்ரொஃபசரு..! – பேராசிரியையால் அதிர்ந்த மாணவரின் தந்தை!

ஆறு வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம்
மேற்கு வங்கத்தில் பேராசிரியை ஒருவர் பிகினி படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள செயிண்ட் சேவியர் பல்கலைகழகத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் படித்து வந்துள்ளார். சமீபத்தில் மாணவர் இன்ஸ்டாகிராமில் பிகினியில் கவர்ச்சியாக இருந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

அதை கண்ட அவரது தந்தை அது யார் என விசாரிக்க தனது கல்லூரி பேராசிரியை என மாணவர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை பல்கலைகழகத்திற்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் மாணவர்கள் மனதை கெடுக்கும்படி பிகினியில் போட்டோ பதிவு செய்யும் பேராசிரியை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அந்த இன்ஸ்டா புகைப்படங்களையும் இணைத்து அனுப்பியுள்ளார்.

அதை தொடர்ந்து அந்த பேராசிரியை பல்கலைகழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த பணி நீக்க நடவடிக்கைக்கு எதிராக பேராசிரியை வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.