திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (15:36 IST)

கேப்டன் விஜயகாந்த்தின் நண்பர் காலமானார்…

மதுரை மத்திய தொகுதியின் முன்னாள் சட்டமன்ற  உறுப்பினரும் விஜயகாந்த்தின் நண்பராக அறியப்பட்டருவமான ஆர். சுந்தரராஜன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் தேமுதிகவின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் வெற்றி பெற்றி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அந்த சட்டமன்ற தேர்தலில்தான் தேமுதிக அதிமுக வுடன் கூட்டணி அமைத்து 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியானது. விஜயகாந்த் எதிர்க்கட்சியானார்.

இதையடுத்து ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்திற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாத்தில் தேமுதிகவில் இருந்து விலகி சிலர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களில் ஒருவர்தான் ஆர். சுந்தரராஜன்,

நடிகர் விஜயகாந்தின் நண்பராகவும் மதுரையில் விஜயகாந்த் நற்பணி மன்றம் அமைத்தவருமான ஆர். சுந்தரராஜன்  உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்து அவரது நண்பர்கள்,உறவினர்கள் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,