வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 அக்டோபர் 2024 (13:02 IST)

இவ்வளவு கவர்ச்சி ஆகாது.. திஷா பதானியால் கங்குவாவுக்கு வந்த புதிய சிக்கல்!

Disha Patani

சூர்யா நடித்து வெளியாகவுள்ள கங்குவா படத்தின் பாடல் வெளியான நிலையில் அதில் திஷா பதானியின் கவர்ச்சி காட்சிகளால் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாராகியுள்ள படம் ‘கங்குவா’. பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 

முன்னதாக இந்த படத்தின் Fire song வெளியாகியிருந்த நிலையில், சமீபத்தில் இரண்டாவது பாடலாக யோலோ (Yolo) என்ற பாடலும் வெளியாகியிருந்தது. இதில் சூர்யாவும், திஷா பதானியும் இணைந்து ஆடும் சில வீடியோ காட்சிகளும் இடம்பெற்றிருந்த நிலையில், திஷா பதானியின் கவர்ச்சியான நடனம் இளைஞர்களை ஈர்த்துள்ளது.
 

 

ஆனால் திஷா பதானி காட்சிகள் அதிக கவர்ச்சியாக உள்ளதாக கூறி அந்த காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது மாற்றி அமைக்க வேண்டும் என சென்சாரில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அக்டோபர் 26ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

 

Edit by Prasanth.K