4 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; உடற்கல்வி ஆசிரியர் கைது
புதுவையில் 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும் போதிலும் இந்த பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் புதுவையில் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, அதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்த சேவியர் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி பள்ளி ஆசிரியையிடம் புகார் அளித்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த மாணவி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் சேவியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.