1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:16 IST)

56 வயதிலும் புல்ஃபிட்.... சூப்பர் ஸ்டார் சல்மான் புகைப்படம் வைரல்

salman khana
இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் அதிரி புதிரி ஹிட் ஆகும். ஆனால், சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான தபாங்-3 படம் படுதோல்வி அடைந்தது.

எனவே, அடுத்து இவர் நடித்து வரும் படம் Kabhi Eid Kabhi Diwali(  காபி எட் காபி தீபாவளி) என்ற படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பர்ஹாட் சாம்ஜி  இயக்குகிறார் சல்மானும் இணைந்து நதியவாலா என்டர்டெயின்மென்ட்  தயாரித்து வருகிறது.

இப்படத்தில் விஜயின் மாஸ்டர் பட நடிகை பூஜா ஹெக்டே ஹிரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து,  வெங்கடேஷ், ஜகபதிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் ஷேக்னாஷ் கில்  நடிப்பதாக தகவல் வெளியானதை  அடுத்து, இவர் அப்படத்தில் இருந்து வெளியேறியதாக வதந்திகள் பரவியது.

இதுகுறித்து  நடிகை ஷேக்னாஷ் கில், Kabhi Eid Kabhi Diwali.இப்படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த  நிலையில் நடிகர் சல்மான் கான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை Being Strong என்ற கேப்சனுடன் பதிவிட்டிருந்தார். இது வைரலாகி வருகிறது.

இதற்கு 1 லட்சம் பேர் லைக்குகள் குவிந்துள்ளனர்.

v