1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (16:02 IST)

விஜய் சேதுபதி- ஹெச் வினோத் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது?

விஜய் சேதுபதி மற்றும் ஹெச் வினோத் ஆகியோர் அடுத்து ஒரு படத்துக்காக இணைய உள்ளார்.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் படி விஜய் சேதுபதியை வினோத் தனது அடுத்த படத்தில் இயக்க உள்ளாராம்.

ஏற்கனவே இது சம்மந்தமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதியும் தான் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் வெற்றி பெறாததால் எப்படியாவது ஒரு கமர்ஷியல் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இந்த படத்தை பெரிதும் நம்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் 61 படத்தின் ஷூட்டிங் முடித்ததும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கலாம் என முதலில் வினோத் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் இப்போது அஜித் 61 படம் முடியாத காரணத்தால் நவம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.