1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (16:30 IST)

அனுஷ்காவுக்கு அன்பு முத்தம் கொடுத்த சகோதரர்கள் : வைரல் போட்டோ

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை அனுஷ்கா. நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் இவர் நடிப்பில் வெளியான, அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது, முன்னணில் இயக்குநர்களின் படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை அனுஷ்கா கடந்த மாதம் நவம்பர் 7 ஆம் தேதி தனது தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
 
அந்த விழாவில், குணரஞ்சன் ஷெட்டி, சாய்ரமேஷ் ஷெட்டி என அனுஷ்காவின் இரு சகோதர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது, இரு சகோதரர்களும் தங்கை அனுஷ்காவுக்கு ஒருசேர முத்தம் கொடுக்கும் போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.