1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 28 நவம்பர் 2019 (19:44 IST)

மெலிந்த கால்களுடன் சிறுமி !!! நெட்டிசன்களை குழப்பம் அடையச் செய்த வைரல் போட்டோ !

இளைஞர்கள் இன்றைய சமூக ஊடகம்  இல்லாமல்  இருப்பதில்லை. உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வுகள் கூட நெட்டிசன்களின் கவனத்துக்கு வந்துவிடும். இந்நிலையில் ஒரு ஐந்து வயது சிறுமியின் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
கிரிஸ்டோபர் பெரி என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், கடந்த திங்கட் கிழமை அன்று,  ஒரு வீடியோவை பதிவிட்டார்.
 
அதில், அந்த ஒரு ஐந்து வயது சிறுமியின் கால்கள் மிகவும் மெலிந்ததுபோலவும் அவர் மாற்றுத் திறனாளி போலவும் தெரிந்தது.
 
ஆனால் இவ்வளவு மெலிந்த கால்களுடன் எப்படி , எந்தப் பிடிப்பும் இல்லாமல் சிறுமி நிற்கிறார் என்ற கேள்வி அந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது எழுந்தது.

இந்நிலையில் அந்த போட்டோவை உற்றுப் பார்த்தால்,அதில், சிறுமி கையில் ’பாப் கார்ன்’ வைத்திருப்பதும், அது, புல் தரையின் நிறத்திலேயே இருப்பதால் போட்டோவை பார்க்கும்போது, சிறுமியின் கால்கள் மெலிதாக இருப்பதுபோன்று தெரியவந்தது. குழப்பமும் தீர்ந்தது.