வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (16:04 IST)

இந்தியில் எடுபடாத தென்னிந்திய நடிகர்களின் படங்கள்… சாதிக்குமா வலிமை!

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானாலும் திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்புக் கிடைப்பதில்லை.

தென்னிந்திய நடிகர்களுக்கு வட இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் இல்லை. ரஜினி, கமலை வட இந்திய ரசிகர்கள் அறிந்திருந்தாலும், அவர்களுக்கென்று சொல்லிக்கொள்ளும் மார்க்கெட் இல்லை. விஜய்யின் புலி மற்றும் மாஸ்டர் ஆகிய படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டாலும், பெரிய வெற்றி பெறவில்லை. இதற்கு ஒரே விதிவிலக்காக பிரபாஸ் மட்டுமே உள்ளார். அவரின் பாகுபலி வெற்றி இந்தியாவையே திரும்பி வைத்தது.

இந்நிலையில் இப்போது அஜித்தின் வலிமை திரைப்படம் இந்தியில் நேரடியாக வெளியாக உள்ளது. அதன் தயாரிப்பாளர் போனி கபூர் இந்தியில் முன்னணி தயாரிப்பாளர் என்பதால் இந்த படத்தை சிறப்பாக மார்க்கெட்டிங் செய்யும் முனைப்பில் உள்ளாராம்.