1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (10:08 IST)

பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெறும் மோகன்லாலின் நேரடி ஓடிடி படம்!

மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கியுள்ள ப்ரோ டாடி திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் மீண்டும் ப்ரோ டாடி என்று  ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா மற்றும் கனிகா உள்ளிட்ட  பலரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். குறுகிய கால படமாக உருவான இந்த படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.

நேரடி ஓடிடி வெளியீடாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இப்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 26 (நேற்று) ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் இந்த படம் வெளியானது. நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது.

இதையடுத்து இந்த படத்தைப் பார்த்து ரசிகர்கள் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கலகலப்பான குடும்ப படம் ஒன்றை பார்த்த திருப்தி எழுந்துள்ளதாக விமர்சனங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.