1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (09:56 IST)

ஏப்ரலில் சிம்புவின் அடுத்த படம்… விறுவிறுவென நடக்கும் படப்பிடிப்பு!

சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு தனது திரையுலக வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸில் இருக்கிறார். இதையடுத்து அவர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இப்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த மாதத்துக்குள் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.