சீனு ராமசாமி படத்தில் கதாநாயகி ஆன பிரிகிட சகா!
சீனு ராமசாமி விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான மாமனிதன் திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து ரிலீஸுக்குப் பிறகு பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறது. சமீபத்தில் ரஷ்ய நாட்டில் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகி விருதை வென்றது.
இந்நிலையில் இப்போது ஜி வி பிரகாஷ் நடிப்பில் சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து அவர் புதுமுக நடிகர் ஏகன் நடிக்கும் கோழிப்பன்னை செல்லதுரை என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரிகிடா சகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.