வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2023 (07:59 IST)

விஜய் படத்தில் இணையும் டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம்!

பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். அக்டோபர் 2 ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூஜைக்கு அடுத்த நாள் ஒரு பாடல் காட்சியோடு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் நடன இயக்குனராக பணியாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.