சோனி லிவ் தளத்தோடு முடிகிறதா கமல்ஹாசன் நிறுவனத்தின் கூட்டணி.. பின்னணி என்ன?
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதனால் காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் ஷூட்டிங் அதிக நாட்கள் நடந்ததால் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தாலும், படத்துக்கு பைனான்ஸ் செய்வது சோனி லிவ் ஓடிடி நிறுவனம்தான் என சொல்லப்பட்டது. தொடர்ந்து இந்த கூட்டணி பல படங்களை தயாரிக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் படத்தின் பட்ஜெட் எகிறியதால் இரு நிறுவனத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்த படத்தோடு பிரிய முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.