செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 டிசம்பர் 2018 (21:40 IST)

சபாஷ்! படுமோசமான ஆபாச உடையணிந்து வந்த நடிகைக்கு 5 வருட சிறை!

ஆபாச உடை அணிந்து வந்த நடிகை ரானியா யூசுப்புக்கு 5 வருட சிறை தண்டனை கொடுத்து  கோர்ட் தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகைகள் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்க மாட்டார்கள், பொதுவாக சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு வரும் நடிகைகள் மிக கவர்ச்சியாக உடை அணிந்து தாராளம் காட்டுவார்கள் . அது எல்லா நாட்டிலும் இருக்கும் ஒரு நடைமுறை தான் . அதிலும் சில நடிகைகள் அணிந்து வரும் உடைகள் படு மிக மோசமாக பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கும். அதற்காக சம்மந்தப்பட்ட நடிகைகள்  தங்கள் ரசிகர்களிடமே வாங்கி கட்டிக்கொள்வதெல்லாம் வழக்கம் தான் . 
 
ஆனால் எகிப்தில் நடந்த ஒரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு தொடை தெரியும்படி மெல்லிய உடை அணிந்து வந்த நடிகை ரானியா யூசுப்பை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
இவர் எகிப்து நாட்டு நடிகை. 44 வயதான ரானியா, ‘கெய்ரோ சினிமா விருது விழா’விற்கு வரும்போது அணிந்து வந்த உடை ஆபாசமாக உள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்து வரும் ஜனவரி 12ம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது. 


 
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்த நடிகைக்கு 5 வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.