1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (20:24 IST)

வாலியை அடுத்து ஹிந்திக்கு போகும் அஜித்தின் இன்னொரு படம்

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான 'வாலி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் பெற்று உள்ளார் என்பதும் இந்த திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்காக அவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்திக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து உள்ளதாகவும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் வாலியை அடுத்து அஜித் நடித்த இன்னொரு சூப்பர் ஹிட் திரைப்படமான ’வரலாறு’ திரைப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையையும் போனிகபூர் பெற்றுள்ளார். இந்த இரண்டு படங்களிலும் அஜித் நடித்த வேடத்தில் போனிகபூர் மகன் நடிப்பார் என்று கூறப்படுகிறது
 
மேலும் அஜீத்தின் சூப்பர் ஹிட் படங்களான மங்காத்தா, வேதாளம் உட்பட ஒரு சில படங்களின் ரீமேக் உரிமை குறித்தும் போனிகபூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அஜித்தின் ‘வலிமை’ படத்தை தயாரித்து முடிப்பதற்குள் போனிகபூர், அஜித்தின் நான்கைந்து திரைப்படங்களின் ரீமேக் உரிமையை பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது